Page:Tamil proverbs.pdf/310

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
292
பழமொழி.
  1. சமர்த்தி என்ன பெற்றாள் சட்டிச்சோறு தின்னப் பெற்றாள்.
    What did the clever matron get, she got rice in chatty fulls.

  2. சமர்த்துள்ள சேவகனுக்குப் புல்லும் ஆயுதமாம்.
    Even a blade of grass is a weapon in the hands of a skilful warrior.

  3. சமர்த்துள்ள சேவகனுக்கு வாள் பழுதானாலும் கேடு இல்லை.
    Though his sword is injured, the skilful soldier suffers no loss.

  4. சமர்த்துக்குச் சனியன்.
    In power, equal to Saturn.

  5. சமிக்கை அறியாதவன் சதுரன் அல்ல.
    He who cannot comprehend a sign is not clever.

  6. சமிக்கை காட்டிச் சண்டைக்கு அழைக்கிறான்.
    He is inciting to fight by shewing signs.

  7. சமுசாரக்குட்டு வெளி இட்டால் நஷ்டம்.
    It is a loss for family broils to get abroad.

  8. சமுத்திரமும் சாக்கடையும் சரியா?
    Are the ocean and a ditch alike?

  9. சமுத்திரத்திலே ஏற்றம் போட்டதுபோல் இருக்கிறது.
    Like planting a picotta on the sea-side.

  10. சமுத்திரத்திற்கும் சாண் குண்டுக்கும் எம்மாத்திரம்?
    How vast the difference between the ocean and a span-wide ditch?

  11. சமுத்திர வன்கணன் சண்டாளன்.
    A deep treacherous fellow is a wretch.

  12. சமையல் வீட்டிலே நாய் நுழைந்தாற்போல.
    As a dog crept into the cooking room.

  13. சமையல் வீட்டிலே முயல் தானே வந்ததுபோல.
    As a hare of its own accord came into the cook room.