Page:Tamil proverbs.pdf/317

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
299
  1. சாண் பாம்பானாலும் முழத் தடி வேண்டும்.
    Although the snake may be only a span-long, a stick a cubit long is required to kill it.

  2. சாண் பிள்ளையோ ஆண் பிள்ளையோ?
    Is it a span-long child or a bold man?

  3. சாதி அந்த புத்தி குலம் அந்த ஆசாரம்.
    Ideas suited to caste, manners suited to rank.

  4. சாதிமானமும் சமயமானமும் சந்நியாசிக்கு உண்டு.
    Caste and religious distinctions obtain even among religious mendicants.

  5. சாது மிரண்டாற் காடு இடம் கொள்ளாது.
    When the meek are enraged, even a forest will not hold-their wrath.

  6. சாதுரியப் பூனை மீன் இருக்கப் புளியங்காயைக் கொண்டு போய்விட்டது.
    The cunning cat left the fish, and carried off the tamarind fruit.

  7. சாதுரியப் பூனை தயிர் இருக்கச் சட்டியை நக்கிற்று.
    The artful cat left the curds, and licked the chatty.

  8. சாத்தானி குடுமிக்கும் சந்நியாசி பூணூலுக்கும் முடி போடுகிறாய்.
    Thou art tying the knot of Sattàni’s hair to the sacred thread of the religious mendicant.

  9. சாஸ்திரம் பொய் என்றால் கிரகணத்தைப் பார்.
    If the shasters are false, look at the eclipse.

  10. சாஸ்திரம் பார்த்துப் பெண்ணைக் கொள் கோத்திரம் பார்த்துப் பெண்ணைக் கொடு.
    Take a wife after consulting the shasters and give a daughter in marriage after ascertaining the character of the family into which she is going.