Page:Tamil proverbs.pdf/318

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
300
பழமொழி.
  1. சாஸ்திரம் பாராத வீடு சமுத்திரம், பார்த்த வீடு தரித்திரம்.
    The family that regards not the shasters has an ocean of wealth, whilst the one that regards them is in poverty.

  2. சாஸ்திரம் கற்றீவன் தானே காசு.
    He who is learned in the shasters is himself money.

  3. சாந்துப்பெட்டி பாம்புப்பெட்டி ஆயிற்று.
    The scent box has become a box of snakes.

  4. சாப்பிள்ளைப் பெற்றுத் தாலாட்டவா?
    Can you dandle a still-born child?

  5. சாப்பிள்ளைப் பெறுவதிலும் தான்சாவது நலம்.
    Better die than bear a still-born child.

  6. சாப்பிள்ளைப் பெற்றவளுக்குச் சந்தோஷம் வருமா?
    Will she have joy who has borne a still-born child?

  7. சாப்பிள்ளை பெற்றாலும் மருத்துவிச்சிகூலி தப்பாது.
    Though a still-born child is brought forth, there is no escape from the midwife’s fee.

  8. சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி இடம் கொடுக்கமாட்டான்.
    Though God may bestow the gift, the priest will not suffer you to enjoy it.

  9. சாமைப்பயிரும் சக்கிலியப்பெண்ணும் சமைந்தால் தெரியும்.
    Sámi rice when boiled, and a girl of the shoe-maker class when matured, appear to advantage.

  10. சாம்பலைக் கிண்டி கோழி தானே விலங்கு இட்டுக்கொண்டதுபோல.
    As a hen fettered herself whilst scratching a rubbish heap.

  11. சாம்பலைத் தின்று வெண்ணெய்யைப் பூசினதுபோல.
    Like rubbing the mouth with butter after having eaten ashes.

  12. சாராயத்தை வார்த்துப் பூராயத்தைக் கேளு.
    Pour in liquor and draw out the secret.