Page:Tamil proverbs.pdf/319

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
301
  1. சாலாய் வனைந்தால் என்ன சட்டியாய் வனைந்தால் என்ன?
    What matters it whether the potter makes a large or a small chatty?

  2. சாலோடே தண்ணீர் சாய்த்துக் குடித்தாலும் தாய் வார்க்கும் தண்ணீர் தாகம் தெளியும்.
    Though one may drink water out of a large pot, the water that one’s mother pours out allays one’s thirst.

  3. சாவாமற் கற்பதே கல்வி, பிறர் இடத்தில் ஏகாமல் உண்பதே ஊண்.
    That is learning which teaches us to escape death, and that is food which is obtained without dependence on others.

  4. சான்றோர் இல்லாச் சபை குறவர் சேரி.
    A community without learned men is a hamlet of mountaineers.

சி.

  1. சிங்கம் பசித்தால் தேரையைப் பிடிக்குமா?
    When hungry will a lion prey on frogs?

  2. சிங்கம் பசிக்கு ஆனையையே தேடிக் கொல்லும்; ,அதுபோல், பெரியோர் அக்கறைப்பட்டால் பெரிய காரியத்தையேச் செய்வார்கள்.
    When lions are hungry they go in search of elephants to prey on, in like manner, when the great are reduced to poverty they achieve great things-to relieve their wants.

  3. சிங்கத்துக்குப் பங்கம் இல்லை.
    A lion knows no danger.

  4. சிட்டுக்குருவிமேல் பனங்காயை வைத்ததுபோல்.
    As a palmyra fruit was placed on a small bird.

  5. சிட்டுக்குருவிமேல் பிரம்மாஸ்திரம் தொடுக்கலாமா?
    Do you discharge heavy arrows at small birds?