14
பழமொழி.
-
- அடிமை படைத்தால் ஆள்வது கடன்.
- It is the duty of one who has a slave to employ him.
-
- அடியற்ற பனைபோல் விழுந்தான்.
- He fell as a palmira tree severed from its root.
- So perfect was his prostration. This may be used of obeisance or ruin.
-
- அடியற்ற மரம்போலே.
- As a tree without root.
-
- அடியற்றால் நுனி விழாமலிருக்குமா?
- If the root fail, will not the top fall?
-
- அடியா நாடு படியாது.
- A province in which authority is not enforced will not submit.
-
- அடியாத மாடு படியாது.
- An unchastised bullock will not obey.
-
- அடியிலுள்ளது நடுவுக்கும் முடிவுக்கும் உண்டு.
- That which exists in the bottom is likewise in the middle and top.
-
- அடியும் பட்டுப் புளித்த மாங்காயா தின்னவேண்டும்?
- And besides being beaten, must (one) also eat sour mangoes?
- Spoken of something imposed on one who is already suffering from questionable inflictions.
-
- அடியென்று அழைக்கப் பெண்டீர் இல்லை, ஆண் எத்தனை பெண் எத்தனை என்கிறதுபோல்.
- Like saying to a man how many boys have you, and how many girls, when he has not a wife to whom he can say, Adi.
-
- அடிவானம் கறுத்தால், ஆண்டை வீடு வறுக்கும்.
- If the horizon becomes black, the household of the farmer will begin to parch.
-
- அடுக்களை கிணற்றிலே அமுதம் எழுந்தாற்போல்.
- Like the springing up of nectar in a kitchen well.