Page:Tamil proverbs.pdf/33

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
15
  1. அடுக்களைக்கு ஒரு பெண்ணும் அம்பலத்துக்கு ஒரு ஆணும் இருக்கிறதென்கிறான்.
    He says, to cook, there is a woman; for outdoor work, a man.
    Spoken of needful help already at hand.

  2. அடுக்குகிற அருமை தெரியுமா உடைக்கிற நாய்க்கு?
    Does the dog that breaks (the cooking pots) know how difficult it is to arrange them?
    Used when a heedless clumsy person has disarranged or spoiled some cherished work on which great pains had been bestowed.

  3. அடுத்த கூரை வேவுங்கால் தன் கூரைக்கு மோசம்.
    When a neighbour's roof is in flames one’s own is in danger.

  4. அடுத்தவனைக் கெடுக்கலாமா?
    Is it right to destroy one’s neighbour?

  5. அடுத்தவன் வாழப் பகலே குடி எடுப்பான்.
    Because his neighbour prospers he removes in the day-time i.e., at once.

  6. அடுத்தாரைக் கெடுத்து அன்னம் இட்டாரைக் கன்னம் இடுகிறான்.
    He destroys those about him and robs those who fed him.

  7. அடுத்து அடுத்துச் சொன்னால் தொடுத்த காரியம் முடியும்.
    By continually urging, the work undertaken may be completed.

  8. அடுத்துக் கெடுப்பான் கபடன், தொடுத்துக் கெடுப்பாள் வேசி.
    A deceiver destroys when near, a harlot in contact.

  9. அடுத்து வந்தவர்க்கு ஆதரவு சொல்லுவோன் குரு.
    He is a teacher or spiritual guide who gives wholesome counsel to those who resort to him.

  10. அடுப்பருகில் வெண்ணெயை வைத்த கதை.
    A story about butter being placed near the hearth.