Page:Tamil proverbs.pdf/322

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
304
பழமொழி.
  1. சிறகிலும் மெல்லிசாய்ப் பொன் அடிப்பான்.
    He will beat out gold even thinner than a feather.

  2. சிறகு இல்லாப் பறவைபோல.
    Like a bird without wings.

  3. சிறகு பறிகொடுத்த பறவைபோல.
    Like a bird deprived of its wings.

  4. சிறியாரோடு இணங்காதே சேம்புக்குப் புளி விட்டு மசியாதே.
    Do not associate with the mean, do not macerate chambu greens with acid.

  5. சிறியார்க்கு இனியதைக் காட்டாதே சேம்புக்குப் புளி விட்டு ஆக்காதே.
    Do not offer sweets to children, nor mix acid with chambu greens.

  6. சிறியோர் செய்த சிறு பிழை எல்லாம் பெரியோர் ஆனவர் பொறுப்பது கடனே.
    It is the duty of the great to forgive the faults of inferiors.

  7. சிறியோர் எல்லாம் சிறியர் அல்ல.
    All that are little are not inferiors.

  8. சிறுகச் சிறுகத் தின்றால் மலையையும் தின்னலாம்.
    If you eat little by little, you may consume a mountain.

  9. சிறுகக் கட்டிப் பெருக வாழு.
    Build a small house, and live thriftily.

  10. சிறுக விதைத்தவன் சிறுக அறுப்பான்.
    He that sows little will reap little.

  11. சிறு குழிகள் கொஞ்சம் தண்ணீரால் நிரம்பும்.
    But little water is required to fill a small hole.

  12. சிறு குழந்தை இல்லாத வீடும் வீடு அல்ல, சீரகம் இட்டு ஆக்காத கறியும் கறி அல்ல.
    A house without an infant is not a house, nor is a curry without seerakam-cummin-a real curry.