Page:Tamil proverbs.pdf/323

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
305
  1. சிறுக்கி சின்னப் பணம், சிறுக்கி கொண்டை மூன்று பணம்.
    The young lady is worth a small fanam, and she requires three fanams to adorn her tresses.

  2. சிறு துரும்பும் பல்லுக் குத்த உதவும்.
    Even a small fibre may serve as a tooth-pick.

  3. சிறுத்திருக்கையில் வளையாதது பருத்திருக்கையில் வளையுமா?
    Will that which did not bend when small, do so when it becomes large?

  4. சிறு பிள்ளை செய்த வேளாண்மை விளைந்தாலும் வீடு வந்து சேராது.
    The harvest of little children will never be housed.

  5. சிறு பெண் கட்டின சிற்றாடையா?
    Is it a small cloth worn by a little girl?

  6. சிறுபோது படியாத கல்வி அழுக்குச் சேலையில் சாயம் ஏற்றினதுபோல.
    Learning not acquired in early life is like a cloth dyed when dirty.

  7. சிறு மீன் எல்லாம் பெரு மீனுக்கு இரை.
    Little fish are the prey of great fish.

  8. சிறுமையும் பெருமையும் தான் தர வரும்.
    The lower and higher stations in society, are the result of each one’s exertions.

  9. சிறு ரூபத்தை உடைய பேரும் அரும்பொருளைச் செய்வார்; அதுபோல, சிறு விதை ஆகிய ஆலமரம் பெரு நிழலைக் கொடுக்கும்.
    Those who are of inferior stature may accomplish difficult things: the seed of the banyan is small, but the tree affords a large shade.

  10. சிறு வயதில் கல்வி சிலையில் எழுத்து.
    Learning acquired in youth, is an inscription on stone.

  11. சிறைச்சாலைக்கு அறை இல்லை, தேவடியாளுக்கு முறை இல்லை.
    A prison has no apartments, a temple girl observes no relationships.