Page:Tamil proverbs.pdf/326

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
308
பழமொழி.
  1. சீர் அற்றார் கையிற் செம்பொன் விலை பெறா.
    Fine gold in the hands of the unthrifty is of no value.

  2. சீரியர் கெட்டாலும் சீரியரே.
    Though reduced to poverty, the virtuous are still virtuous.

  3. சீரியருக்கு அன்பு செய்.
    Be kind to the virtuous.

  4. சீலைப்பாய் ஈழம் போய்ச் சீனி சருக்கரை கட்டுமா?
    Will a ragged cloth go to Ceylon to tie up sugar?

  5. சீவனம் செய்ய நாவினை விற்கேல்.
    Do not make merchandise of your tongue for a livelihood.

  6. சீவன் போனால் கீர்த்தியும் போமா?
    Will fame go when life goes?

  7. சீனி என்று எழுதி நக்கினால் இனிக்குமா?
    If you write the word sugar and lick it, will it taste sweet?

சு.

  1. சுக துக்கம் சுழல் சக்கரம்.
    Grief and joy are a revolving wheel.

  2. சுகத்துக்குப் பின் துக்கம் துக்கத்துக்குப் பின் சுகம்.
    After joy grief, after grief joy.

  3. சுகத்தையாவது பெறவேண்டும் தவத்தையாவது பெறவேண்டும்.
    We must either enjoy happiness or practise austerities.

  4. சுகத்தைப் பெற்றதும் அல்ல தவத்தைப் பெற்றதும் அல்ல.
    He has neither obtained happiness nor the fruit of austerities.

  5. சுகம் வந்தால் சந்தோஷப்பட்டுத் துன்பம் வந்தால் பின்வாங்குவானேன்?
    If when prosperous you rejoiced, why draw back when adversity supervenes?