Page:Tamil proverbs.pdf/327

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
309
  1. சுகவாசி உடம்பு கழுதைப் பிறப்பு.
    A man of luxurious habits is an ass.

  2. சுக்கிர உதயத்தில் தாலி கட்டி, சூரிய உதயத்திற்குள் அறுத்தாள்.
    She who was married when Venus rose, was denuded of her marriage symbol at sunrise.

  3. சுக்கிரீவ ஆக்கினையாய் இருக்கிறது.
    It is the infliction of Sugriva.
    Sugriva, a monkey, the ally of Ramachandra.

  4. சுக்கு அறியாத கஷாயம் உண்டா?
    Is there any decoction without dried ginger?

  5. சுக்குத் தின்று முக்கிப் பெற்றால் தெரியும் பிள்ளை அருமை.
    The preciousness of children is known to her who has eaten dried ginger and borne one.
    It is common when a woman is confined, to give her a preparation of dried ginger and other spices.

  6. சுக்குக் கண்ட இடத்திலே முக்கிப் பிள்ளை பெருவாளா?
    Will she bring forth as soon as she sees the dried ginger?

  7. சுக்குக் கண்ட இடத்தில் பிள்ளை பெற்றுச் சூரிய நாராயணன் என்று பெயர் இடுவாள்.
    As soon as she sees the dried ginger, she will bring forth a child, and call it Suryanarayana.
    The name being the expression of her joy.

  8. சுக்கும் பாக்கும் வெட்டித் தாறேன் சுள்சுள் என்று வெயில் எறி.
    Shine out brilliantly, I will give you dried ginger and arica-nut.

  9. சுங்கம் மாறினால் சுண்ணாம்பும் கிடையாது.
    If taxes are heavy, even chunambu cannot be had.

  10. சுங்கமும் கூழும் இருக்கத் தடிக்கும்.
    Taxes and gruel become heavier by being kept.