Page:Tamil proverbs.pdf/329

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
311
  1. சுண்ணாம்பில் இருக்கிறது சூக்ஷம்.
    The speciality or charm of-arica-nut and betel-is in the chunambu.

  2. சுத்த விலங்கோடு சுத்த விலங்குதான் சேரும்.
    A clean beast will join a clean beast.

  3. சுத்த வீரனுக்கு உயிர் துரும்பு.
    To the real hero life is a mere straw.

  4. சுமைதாங்கி சுங்கம் இறுப்பது இல்லை.
    No toll at a resting block.

  5. சும்மா அறுக்கிறாய் என்னடா சொத்தைக் களாக்காயை?
    Why waste your time in cutting the rotten kalákkai?

  6. சும்மா கிடக்கிற தாரையை ஊதிக் கெடுத்தான் அம்மான்.
    By blowing the unused trumpet my uncle spoiled it.

  7. சும்மா கலம் சுமக்க மாட்டான் நனைந்து முக்கலம் சுமப்பான்.
    In fair weather he will not carry one kalam of grain, in foul weather, when drenched with rain, he carries three.

  8. சும்மா போகிறவனைப் பிடிப்பானேன், இராத்திரி எல்லாம் கிடந்து பிதற்றுவான் ஏன்?
    Why seize one going along, and lie groaning all the night?

  9. சும்மா இருந்தால் சோறு ஆமா வாடா சித்தா கால் ஆட்ட.
    Will boiled rice come of itself? Come along Chitta, let us shake our legs.

  10. சும்மா இருந்த அம்மையாருக்கு அரைப் பணத்துத் தாலி போதாதா?
    Is not a marriage symbol worth half a fanam, a gain to the matron who is worth nothing?

  11. சும்மா கிடைக்குமா சோணாசலம் பாதம்?
    Can one approach the feet of Chonachalan without effort?

  12. சுய காரிய துரந்தரன் சுவாமி காரியம் வழவழ.
    He who is intent about his own affairs will not mind the things of God.