Page:Tamil proverbs.pdf/331

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
313
  1. சுவர்க்கத்திற்குப் போகிறபோது பக்கத்தில் ஒரு கூத்தியாரா?
    Is one expected to take his concubine along with him to the paradise of Indra?

  2. சுவாமி வரம் கொடுத்தாலும் முன்னடியான் வரம் கொடான்.
    Though God may grant a boon, the devotee in his presence will not.

  3. சுள்ளாப்பு எல்லாம் பொல்லாப்பு.
    Every bitter sneer leads to evil.

  4. சுள்ளைச் சுட்டுக்கொண்டு கள்ளைக் குடிக்கிறது.
    To grill dried fish and drink toddy.

  5. சுற்றத் துணியும் இல்லை நக்கத் தவிடும் இல்லை.
    No cloth to wear, no bran to lick.

  6. சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்.
    It is the beauty of friendship to be surrounded-by friends.

  7. சுற்றத்தமரைப் பற்றி இரு.
    Live close by your relations.

சூ.

  1. சூடு கண்ட பூனை அடுப்படியிற் செல்லாது.
    A burnt cat shuns the fire-place.

  2. சூடு மிதிக்கிற மாட்டின் வாயைக் கட்டலாமா?
    Is it proper to tie the mouth of the ox that treads out the corn?

  3. சூட்சத்திலே இருக்கிறது மோட்சம்.
    Important ends are attained by comparatively insignificant means.

  4. சூட்சாதி சூட்சத் துல்லிபன்.
    The great contriver who is inscrutable.

  5. சூதபலத்தைச் சுகமுகத்தினால் அறி.
    Know the efficacy of mercury by the glow of health on the cheeks.