Page:Tamil proverbs.pdf/332

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
314
பழமொழி.
  1. சூதனுக்கு நீதி இல்லை.
    The cheat is void of justice.

  2. சூதன் கொல்லையிலேதான் மாடு மேயும்..
    The ox will graze in the field of the intriguing.

  3. சூதானத்துக்கு அழிவு இல்லை.
    Circumspection leads not to ruin.

  4. சூதினால் வெல்வது எளிது.
    It is easy to overcome an enemy by intrigue.

  5. சூதும் வாதும் வேதனை செய்யும்.
    Gambling and boasting end in sorrow.

  6. சூது விரும்பேல்.
    Desire not gambling.

  7. சூத்திரவேதன் சாஸ்திரம் பார்ப்பான்.
    A stringed brahman observes the shasters.

  8. சூத்திரப் பாவை போல நடிக்கிறான்.
    He dances like a puppet.

  9. சூரியன் கீழே தோன்றினது எல்லாம் மாயை.
    All under the sun is vanity.

  10. சூரியனைக் கையால் மறைத்ததுபோல்.
    Like hiding the sun with the hand.

  11. சூரியனைக் கண்ட இருள் கபோல்.
    Like darkness that has seen the sun.

  12. சூரியனைக் கண்ட பனிபோலே நீங்கும்
    It will vanish as the dew before the sun.

  13. சூரியனுக்கு முன் மின்னாம்பூச்சிபோல்.
    Like a fire-fly before the sun.