Page:Tamil proverbs.pdf/340

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
322
பழமொழி.
  1. செல்வப்பொருள் கொடுத்தால் குறையும், கல்விப் பொருள் குறையுமோ?
    On giving, wealth diminishes, will learning also so diminish?

  2. செல்வம் செருக்குகின்றது வாசற்படி வழுக்குகின்றது.
    Wealth makes one proud, the door-steps are slippery.

  3. செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல்.
    It is an honor to the wealthy to protect their relatives.

  4. செல்வன் சொல்லுக்கு அஞ்சான், வீரன் போருக்கு அஞ்சான்.
    The wealthy fear no orders, the hero is not afraid of war.

  5. செல்வம் நிலையில, சேட்டன் கீழ் இரு.
    Wealth is impermanent, live in subjection to a superior.

  6. செவிடன் காதில் சங்கு ஊதினதுபோல.
    Like blowing a conch in the ear of the deaf.

  7. செவிடனும் குருடனும் கூத்துப் பார்த்தாற்போல.
    As the deaf and the blind attended a comedy.

  8. செவிடன் பாட்டுக் கேட்ட சம்பந்தம்.
    As the deaf listened to a song.

  9. செவிடு இருந்தால் ஊமை இல்லையா?
    If one is deaf is he not dumb also?

  10. சென்மக் குருடனுக்குக் கண் கிடைத்ததுபோல
    As one born blind obtained his sight.

  11. சென்ற காரியத்தைப் பார்த்து வரும் காரியத்தை அறி.
    Learn the future by looking at things past.

  12. சென்ற இடம் எல்லாம் சிறப்பே கல்வி.
    Learning distinguishes one whithersoever he goes.