Page:Tamil proverbs.pdf/346

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
328
பழமொழி.
  1. சோற்றில் இருக்கிற கல் எடுக்கமாட்டாதவன் முகனைக்கல் எடுப்பானா?
    Can he who would not pick a stone out of the rice, lift up the stone lintel of a temple gateway?

  2. சோற்றில் இருந்த கல் எடாதவன் சேற்றில் கிடக்கிற எருமையைத் தூக்குவானா?
    Can he who will not pick a stone out of his rice, lift a buffalo out of the mud?

  3. சோற்றுக்கு வீங்கின நாயே, மாட்டுப் பொங்கலுக்கு வாயே.
    Thou dog, greedy of boiled rice, come to the January ox-festival.

  4. சோற்றுக்கு இல்லாத பூசணிக்காய் பந்தலிலே கட்டி ஆட்டவோ?
    Of what use is a pumpkin which will not be available for food, is it to be suspended to a pandal swing?

  5. சோற்றுச் சுவையோடு தொத்தி வந்த நொள்ளை.
    The blind that came drawn by the smell of rice.

  6. சோற்றுக்குக் கேடும் பூமிக்குப் பாரமுமாய் இருக்கிறான்.
    He is a waste of rice, he is a burden to the earth.

  7. சோற்றைக் கொடுத்துக் கழுத்தை அறுக்கிறதா?
    What, to cut one’s throat after giving rice?

சௌ.

  1. சௌரியம் பேசேல்.
    Boast not of your strength.

ஞ.

  1. ஞாபகம் இல்லை என்று எவனும் சொல்வான், ஞானம் இல்லை என்று எவனும் சொல்லான்.
    Any may say I have forgotten, none says I have no sense.