Page:Tamil proverbs.pdf/347

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
329
  1. ஞாயப் பிரமாணம் இல்லாத குருக்கள் வீண்.
    Teachers without moral rules are vain.

  2. ஞானமும் கல்வியும் நாழி அரிசியிலே.
    Wisdom and learning are contained in a measure of rice. -

  3. ஞானம் எல்லாம் ஒரு மூட்டை; உலகம் எல்லாம் ஒரு கோட்டை.
    Collective wisdom is a bundle, and the whole world a fort.

  4. ஞானம் இல்லாச் சேயர்கள் ஆவின் கன்றிலும் அதிகமல்ல.
    Ignorant children, are not better than calves.

  5. ஞானம் தனத்தையும் கனத்தையும் கொடுக்கும்.
    Wisdom gives wealth and honour.

  6. ஞானிக்கு இல்லை இன்பமும் துன்பமும்.
    The wise are not affected by pleasure and pain.

  7. ஞானிக்கும் மூடனுக்கும் சங்காத்தம் இல்லை.
    A wise man and a fool do not associate.

த.

  1. தகப்பன் வெட்டின கிணறென்று தலைகீழாய் விழுவார்களா?
    Will they fall headlong into the well because their father dug it?

  2. தகப்பனுக்கு இட்டது தலைச்சனுக்கு.
    What was given to the father, will be entailed on his first-born.

  3. தகப்பனுக்குக் கட்டக் கோவணத்துக்கு வழி இல்லை, மகன் தஞ்சாவூர் மட்டும் நடைப்பாவாடை போடச் சொன்னானாம்.
    Whilst the father is without waist-cloth, his son, it is said, asked him to spread cloth on the ground to walk on as far as Tanjore.

  4. தகப்பனைக் கொன்ற பாவம் மாமியார் வீட்டில் ஆறு மாதம் இருந்தால் போகும்.
    The murder of a father may be expiated by residing for six months in the house of one’s mother-in-law.