Page:Tamil proverbs.pdf/351

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
333
  1. தட்டாரச் சித்து தறிச்சித்து வண்ணாரச் சித்துக்கு வராது.
    The tricks of a goldsmith and of a weaver, are not equal to those of a washerman.

  2. தட்டானிடத்தில் இருக்கிறது அல்லது கும்பிடுசட்டியில் இருக்கிறது.
    It is either in the possession of the goldsmith, or in his vessel.

  3. தட்டிப் பேசுவார் இல்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்.
    When there is none to contradict tambi is very fierce.
    Tambi, a younger brother, is often used in a friendly way, when addressing a junior.

  4. தணிந்த வில்லுத்தான் தைக்கும்.
    It is the bent bow that will shoot.

  5. தண்டிலே போனால் இரண்டில் ஒன்று.
    When you go into the army, one of two-life or death.

  6. தண்டிற் போனால் இரட்டிப்புச் சம்பளம்.
    Double remuneration to those who go into the army.

  7. தண்டு ஒன்று இலை மூன்று ஆரை அடா மந்திரி.
    The arai plant, O minister, has one stalk and three leaves.

  8. தண்ணீரில் இருக்கிற தவளை குடித்ததைக் கண்டதார் குடியாததைக் கண்டதார்?
    Who knows whether the frog in the water drinks, or that it does not drink?

  9. தண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அவிக்கும்.
    Although cold water be heated, it will quench fire.

  10. தண்ணீரிலே விளைந்த உப்புத் தண்ணீரிலே கரையவேண்டும்.
    Salt produced from water, must be dissolved in water.

  11. தண்ணீரிலே அமுங்கின முட்டை உப்புப் போடக் கிளம்பும்.
    An egg submerged in water will float, if salt be put upon it.