Page:Tamil proverbs.pdf/350

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
332
பழமொழி.
  1. தஞ்சம் என்று வந்தவனை வஞ்சிக்கல் ஆகாது.
    To cheat one that has come for protection is bad.

  2. தடவிப் பிடிக்க மயிர் இல்லை அவள் பெயர் கூந்தல் அழகி.
    Not a hair to be felt; yet her name is the tressed beauty.

  3. தடவிப் பிடிக்க கை இல்லை அவன் பெயர் சௌரியப் பெருமாள்.
    He has no hand to feel and seize any thing, his name is the notoriously strong.

  4. தடி எடுத்தால் எல்லாம் வேட்டைக்காரர்.
    All are huntsmen who take up sticks.

  5. தடிக்கு மிஞ்சின மிடா.
    A water pot too strong to be broken by a stick.

  6. தடிக்கு அஞ்சிக் குரங்கு ஆடினதுபோல.
    Like a monkey dancing for fear of the stick.

  7. தடிக்கு மிகுந்த மிடாவானால் என்ன செய்யலாம்? .
    If the pot is too strong for the stick, what can be done?

  8. தட்டான் தாய்ப் பொன்னிலும் மாப்பொன் எடுப்பான்.
    A goldsmith will pilfer the gold-dust even of his mother.

  9. தட்டானும் செட்டியும் கண் சட்டியும் பானையும் மண்.
    The goldsmith and the Chetty have each two eyes, the chatty and the pot are of earth.

  10. தட்டானும் செட்டியும்போல.
    Like the goldsmith and the merchant.

  11. தட்டானைச் சேர்ந்த தறுதலை.
    The fool-hardy who associated with the goldsmith.

  12. தட்டான் தாழப் பறந்தால் தப்பாமல் மழை வரும்.
    If a butterfly flies low, it is sure to rain.