Page:Tamil proverbs.pdf/353

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
335
  1. தமிழுக்கு இருவர் தவத்துக்கு ஒருவர் ஆகும்.
    In learning two, in austerities one.

  2. தம் இனம் தம்மைக் காக்கும் வேலி பயிரைக் காக்கும்.
    One’s own kin will preserve one, a hedge will guard a crop.

  3. தம்பி கால் நடையிலே பேச்சுப் பல்லக்கிலே.
    My younger brother is on foot, and his talk is in a palanquin.
    See proverb 3559.

  4. தம்பி பேச்சைத் தண்ணீரிலே எழுதவேண்டும்.
    The sayings of the young man must be written on water.

  5. தம்பி பிடித்த முயலுக்கு மூன்றே கால்.
    The hare my younger brother caught, has only three legs.

  6. தம்பி மொண்டது சமுத்திரம்போல.
    The water my younger brother drew, is like a sea.

  7. தம்பி உழுவான் மேழி எட்டாது.
    My younger brother can plough, but he cannot reach the handle of the plough.

  8. தம்பி பிறக்கத் தரைமட்டம் ஆயிற்று.
    As soon as my younger brother was born, the house was levelled to the earth.

  9. தம்பி சமர்த்தன் உப்பில்லாக் கஞ்சி கலம் குடிப்பான்.
    My younger brother is very clever, he can drink a kalam of kanji without salt.

  10. தம்பி சோற்றுக்குச் சூறாவளி வேலைக்கு வாராவழி.
    My brother is like a whirlwind as a rice consumer, but very tardy at work.

  11. தயிருக்குச் சட்டி ஆதாரம் சட்டிக்குத் தயிர் ஆதாரம்.
    The chatty supports the curds, and the curds the chatty.