Page:Tamil proverbs.pdf/354

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
336
பழமொழி.
  1. தயிர்ப் பானையை உடைத்துக் காகத்துக்கு அமுது இட்டாற்போல.
    Like breaking the vessel that contained the curds, and feeding the crows.

  2. தரத்தர வாங்கிக் கொள்ளுகிறாயா, தலையை முழுகிப்போட்டு போகட்டுமா?
    Will you receive by little and little what I owe, or shall I bathe my head and begone?

  3. தருமத்தைப் பாபம் வெல்லாது.
    Vice will not conquer virtue.

  4. தருமம் தலைகாக்கும் தலையை மயிர் காக்கும்.
    Charity preserves the head, and the head the hair.

  5. தர்மமே தலைகாக்கும்.
    Charity guards the head.

  6. தலை அளவும் வேண்டாம் அடி அளவும் வேண்டாம் குறுக்கே அள அடா படியை.
    The measure of the head or foot is not wanted, you fellow, measure the cloth across.

  7. தலை இருக்கிற இடத்தில் கழுத்து வரட்டும் பார்த்து கொள்வோம்.
    We will attend to the matter when the neck takes the place of the head.

  8. தலை இருக்க வால் ஆடுமா?
    Will the tail wag as long as the head exists?

  9. தலை இடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்.
    When overcome by them, one learns what head-ache and fever are.

  10. தலை இடியும் சங்கடமும் தனக்கு வந்தபின் தெரியும்.
    Head-ache and trouble are understood when actually experienced.