Page:Tamil proverbs.pdf/361

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
343
  1. தன் உயிரைத் தான் தின்கிறான்.
    He himself consumes his own life.

  2. தன் ஊருக்கு அன்னம் பிற ஊருக்குக் காகம்.
    A swan in his own village, a crow in the next.

  3. தன் ஊர்ச் சுடுகாட்டுக்கும் அயல் ஊர் ஆற்றுக்கும் அஞ்ச வேண்டும்.
    In his own village one should fear the place of incremation, in an adjacent country, a river.

  4. தன் ஊருக்கு ஆனை அயல் ஊருக்குப் பூனை.
    At home an elephant, abroad a cat.

  5. தன் ஊருக்குக் காளை அயல் ஊருக்குப் பூனை.
    A bullock at home, a cat abroad.

  6. தன் காரியதுரந்தான் பிறர் காரியம் வழவழவென்று விடுகிறவன்.
    He who attends to his own affairs is indifferent about the things of others.

  7. தன் காரியம் என்றால் தன் சிலையும் பதைக்கும்.
    If it is his own concern, even the folds of his garment will flutter.

  8. தன் காரியம் பாராதவன் சதைக்கு ஒரு புழு புழுப்பான்.
    He who does not attend to his own affairs, will be tormented by worms at every pore.

  9. தன்காரியப் புலி.
    In his own affairs resolute as a tiger.

  10. தன் கீர்த்தியை விரும்பாதவளைத் தள்ளிவிடு.
    Abandon her who is careless of her own reputation.

  11. தன் குற்றம் பார்ப்பவர் இங்கு இல்லை.
    No one on earth sees his own faults.