Page:Tamil proverbs.pdf/378

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
360
பழமொழி.
  1. தினவு எடுத்தவன் சொறிந்துகொள்ள வேண்டும்.
    He whose skin itches will scratch.

  2. தினைப்பயறும் பாலும் தின்னாதிருந்தும், வினைப்பயனை வெல்லுவது அரிது.
    Though one may abstain from eating millet-pulse and milk, he cannot escape from the effect of his evil actions.

  3. தினை விதைத்தவன் தினை அறுப்பான் வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
    He who sows millet, reaps millet, he who sows evil deeds, must reap the same.

  4. தின்கிறதைத் தின்றும் தேவாங்குபோல் இருக்கிறான்.
    Though well fed he is as lean as a sloth.

  5. தின்பது கொஞ்சம் சீவனம் நிலை இல்லை.
    What one eats is little, human life is uncertain.

  6. தின்ற மண்ணுக்குத் தக்க சோகை.
    Chogai jaundice proportioned to the earth eaten.
    It is the opinion of some that jaundice is occasioned by eating sand or earth, a thing not uncommon.

  7. தின்ற நஞ்சு கொல்லும் தின்னாத நஞ்சு கொல்லுமா?
    Poison taken kills; will the poison not taken, kill?

  8. தின்று கொழுத்தால் சும்மா இருக்க ஒட்டாது.
    He who has grown fat will be inclined to mischief.

  9. தின்று உமிழ்ந்த தம்பலத்தைத் தின்ன நினைப்பார்களா?
    Does any one desire to chew his betel over again?

  10. தின்னத் தின்னத் கேட்குமாம் பிள்ளைப்பெற்ற வயிறு.
    A mother who is nursing a baby has a good appetite.