Page:Tamil proverbs.pdf/386

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
368
பழமொழி.
  1. தூக்கி வினைசெய்.
    Do a thing after due deliberation.

  2. தூக்கு உண்டானால் நோக்கு உண்டு.
    Gravity inspires respect.

  3. தூங்காதவனே நீங்காதவன்.
    The sleepless is the abiding one.

  4. தூங்காதவனுக்குச் சுகம் இல்லை.
    He who does not sleep is not healthy.

  5. தூங்கினவனது கடாக்குட்டி, விழித்திருந்தவனது ஊட்டுக்குட்டி.
    The weaned he-goat belongs to him who slept, the suckling to him who was awake.

  6. தூங்கினவன் கன்று கடாக்கன்று.
    The calf of him who slept is a bull calf.

  7. தூங்கினவன் சாகிறதில்லை, வீங்கினவன் பிழைக்கிறதில்லை.
    A patient who sleeps well will not soon die, one whose body is swollen will not live.

  8. தூண்டிற்காரனுக்குக் கண் எங்கே மிதப்பில் அல்லவோ?
    Where is the eye of the angler? on the float, is it not?

  9. தூமத் தீயைப் பார்க்கிலும் காமத் தீ கொடிது.
    The fire of lust is more fierce than a smoking fire.

  10. தூர இருந்தால் சேர உறவு.
    Distance promotes close friendship.

  11. தூரத்துப் பச்சை கண்ணுக்குக் குளிர்ச்சி.
    Green in the distance is cooling to the eye.

  12. தூரத்துப் பார்வைக்கு மலை மழமழப்பு, கிட்டப்போனால் கல்லும் கறடும்.
    A mountain in the distance appears smooth, but as we approach it, the surface becomes rugged.