Page:Tamil proverbs.pdf/402

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
384
பழமொழி.
  1. நரை திரை இல்லை, நமனும் அங்கு இல்லை.
    He is not grey nor wrinkled; Yama is not there.

  2. நல் இணக்கமல்லது அல்லற் படுத்தும்.
    Evil communications will bring distress.

  3. நல் இனதில் நட்பு வலிது.
    Friendship is stronger than close relationship.

  4. நல்ல உயிர் நாற்பது நாள் இருக்கும்
    A good man’s life may continue forty days.

  5. நல்ல எழுத்து நடுவே இருக்கக் கோணல் எழுத்துக் குறுக்கே போட்டது என்ன?
    A good letter-destiny-being in the middle, how were the crooked letters put in?

  6. நல்ல அமைச்சு இல்லாத அரசு விழி இன்றி வழிச்சொல்வோன் போலாம்.
    A king without a good counsellor, is like a wayfaring man who is blind.

  7. நல்லது கெட்டால் நாய்க்கும் வழங்காது.
    When the good becomes bad, even a dog will not use it.

  8. நல்லதுக்கு ஒரு பொல்லாதது, பொல்லாததுக்கு ஒரு நல்லது.
    A good husband may have a bad wife, and a bad husband may have a good wife.

  9. நல்ல குடிக்கு நாலத்தொரு பங்காளி.
    One who holds a fourth share in a prosperous family.

  10. நல்லது செய்து நடுவழியே போனால் பொல்லாது போகிறவழியே போகிறது.
    If you do good and walk in the middle of the road, the evil will find its own way.

  11. நல்லது நாற்கலம், ஊத்தை ஒன்பது கலம்.
    Of the good only four kalams, of the bad nine kalams.