Page:Tamil proverbs.pdf/401

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
383
  1. நரி ஊரைவிட்டுப் புலி ஊருக்குப் போனேன் புலி ஊரும் நரி ஊராயிற்று.
    Leaving the region of jackals I went to that of the tigers, and that became a region of jackals.

  2. நரி ஒரு சாலுக்கு உழப்போனது.
    The jackal is gone to plough.

  3. நரி கூப்பிட்டுக் கடல் முட்டுமா?
    Will the howling of the fox reach the sea?

  4. நரி கூப்பிடு கடல் முட்டிப்போகும்.
    The howling of the jackal will reach the ocean.

  5. நரி கொழுத்தால் வளையில் இராது.
    If the jackal becomes fat, it will not remain in its hole.

  6. நரி கொழுத்து என்ன காஞ்சிரம் பழுத்து என்ன?
    What if the jackal becomes fat, or the gall-nut ripen?

  7. நரிக்குட்டிக்கு ஊளை பழக்கவேண்டுமா?
    Is the young jackal to be trained to howl?

  8. நரிக்குப் பெரியதனம் கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்கும்.
    If the jackal gains the mastery, he will demand two sheep from every flock.

  9. நரி நாலு கால் திருடன் இடையன் இரண்டு கால் திருடன்.
    The jackal is a quadraped thief, the shepherd is a biped thief.

  10. நரிமுன்னே நண்டு கரணம் போட்டதுபோல
    As the crab made somersaults before a jackal.

  11. நரியின் கையிலே குடல் கழுவக் கொடுக்கிறதா?
    Are viscera to be given into the hands of a jackal to be washed?

  12. நரிவாலைக் கொண்டு கடல் ஆழம் பார்க்கிறதுபோல.
    Like measuring the depth of the ocean with the tail of a jackal.