Page:Tamil proverbs.pdf/400

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
382
பழமொழி.
  1. நண்பொருள் கொடுத்து நன்றாய் ஓது.
    Pay the teachers fee, and learn well.

  2. நத்த வாழையிலை நித்தம் காற்பணம்.
    A village plantain leaf always costs a quarter fanam.

  3. நத்தை வயிற்றில் முத்துப் பிறந்தது.
    Pearls are produced in the belly of an oyster or snail.

  4. நந்த வனத்து ஆண்டிக்கும் முயல் வேட்டைக்கும் எத்தனை தூரம்.
    How distant are the occupations of the mendicant of the grove, and of the hare-hunter.

  5. நபாப் அத்தனை ஏழை புலி அத்தனை சாது.
    Poor as a Nabob, and gentle as a tiger.

  6. நமது தலைமயிர் அவன் கையில் அகப்பட்டுக்கொண்டது.
    The hair of the head is seized by his hand.

  7. நமனுக்கு நாலு பிள்ளை கொடுத்தாலும், உற்றாருக்கு ஒரு பிள்ளை கொடுக்கமாட்டான்.
    Though he may give four children to Yama, he will not give one to his relatives.

  8. நமன் எடுத்துக்கொண்டு போகும்பொழுது நழுவி விருந்தவன்.
    He slipped and fell when Yama was carrying him off.

  9. நமன் அறியாத உயிரும் நாரை அறியாத குளமும் உண்டோ?
    Is there a soul that Yama knows not, is there a tank unknown to the crane?

  10. நம்ப வைத்துக் கழுத்து அறுக்கலாமா?
    May you cut a man’s throat after ingratiating yourself in his confidence?

  11. நம்பின பேரை நடு ஆற்றில் விடலாமா?
    May you leave in the middle of the river, those who have confided themselves to your care?