Page:Tamil proverbs.pdf/399

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
381
  1. நடுத்தரமானவருடைய தாங்கல் பொன்னின் பிளவு போலப் பற்றவைத்தால் மாறும்.
    A fracture in gold vanishes when exposed to the fire; in like manner the anger of the good passes away.

  2. நடுவு நிலைமை உடையவர்க்குச் செய்த உபகாரம் கொஞ்சக்காலத்திற்கு நிற்கும்; அதுபோல, தாமரையில் விழுந்த மழைத்துளி நிற்காமல் மறையும்
    A benefit conferred on the indifferent is remembered for a short time, so a drop of rain on a lotus leaf vanishes soon.

  3. நடை சிறிதாகில் நாள் ஏறும், படை சிறிதாகிற் பயம் ஏறும்.
    If one’s pace be slow he will be long on the way, if an army be small, its anxiety will be great.

  4. நஷ்டத்துக்குப் பலர் நயத்துக்கு ஒருவனோ?
    Is one to have the gain, and many to share the loss?

  5. நஷ்டத்துக்கு ஒருவன் நயத்துக்கு ஒருவன்.
    One loses, one gains.

  6. நட்டாற்றிலே கைவிடுகிறது நன்மையா?
    Is it kind to abandon one in the middle of a river?

  7. நட்டுவன் பிள்ளைக்கு முட்டடிக்கத் தெரியாதா?
    Does not the child of a drummer know how to drum?

  8. நட்டுவன் பிள்ளைக்குக் கொட்டிக் காட்டவேண்டுமா?
    Does the child of a drummer require a preceptor?

  9. நண்டுக் குடுவையை நடுத்தெருவில் உடைத்ததுபோல.
    Like breaking in the middle of the street a pot containing crabs.

  10. நண்டு கொழுத்தால் வளையில் இராது.
    The crab will not remain in its hole when it becomes fat.

  11. நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைத்ததுபோல.
    Like setting a jackal to watch a roasted crab.