Page:Tamil proverbs.pdf/404

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
386
பழமொழி.
  1. நல்லவர் கண்ணில் நாகம் பட்டாலும் கொல்லார்.
    Though it is before them the virtuous will not kill even a cobra.

  2. நல்லவன் என்ற பெயர் எடுக்க நாட் செல்லும்.
    Time must elapse before one can get a good name.

  3. நல்லவர்கள் ஒரு நாள் செய்த உபகாரத்தை மறவார்; அதுபோல, பனை ஒரு நாள் விதைத்துத் தண்ணீர் விட்டவனுக்குப் பலன் கொடுக்கும்.
    The good never forget a benefit; in like manner a palmyrah tree yields its produce to him who planted and watered it.

  4. நல்லவன் ஒருவன் நடுவே நின்றால் அறாத வழக்கும் அறும்.
    If there be but one good man present in a suit, the greatest difficulties will be solved.

  5. நல்ல வார்த்தை சொல்லி நாடியைத் தாங்கினான்.
    He spoke conciliatory words, and touched my chin cringingly.

  6. நல்ல இளங்கன்றே துள்ளாதே.
    My good young calf, dont be frisky.

  7. நல்லறம் உள்ளது இல்லறம்.
    Domestic virtue is excellent.

  8. நல்ல வேலைக்காரன் ஆற்றோடே போகிறான்.
    He is a good servant, but the river carries him away.

  9. நல்ல உடலுக்கு இளைப்பாற்றி கொடாவிட்டாலும் நாவிற்குக் கொடு.
    Though you may not give rest to your body, give rest to your tongue.

  10. நல்லவர்கள் சங்காத்தம் நல்ல மணலில் விழுந்த நீர்போல உதவும்.
    The friendship of the good will prove useful like water falling on good soil.

,