Page:Tamil proverbs.pdf/405

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
387
  1. நல்லாரைக் கண்டால் நாய்போல, பொல்லாரைக் கண்டால் பூனைபோல.
    If he sees the good, a dog, if he sees the wicked, a cat.

  2. நல்லாரை நாவு அழியப் பேசினால் பல்லாலே பதக்குப் புழுச் சொரியும்.
    If one abuses his tongue by slandering the virtuous, maggots will drop from his teeth.

  3. நல்லாரும் நல்ல பாம்பைப்போலத் தங்கள் வலிமையை அடக்கி மறைத்திருப்பார் சில வேளை.
    The good, like the cobra, sometimes restrain their power and conceal themselves.

  4. நல்லாரை நாவில் உரை, பொன்னைக் கல்லில் உரை.
    Test the good by the words of the tongue, and gold on a touchstone.

  5. நல்லார் பொல்லாரை நடக்கையால் அறியலாம்.
    The good and the bad may be known by their conduct.

  6. நல்லோர் ஒருவருக்குப் பெய்யும் மழை எல்லாருக்கும் ஆம்.
    The rain that falls on account of one virtuous person, is beneficial to all.

  7. நல்லோர் நடக்கை தீயோருக்குத் திகில்.
    The acts of the virtuous are a terror to the wicked.

  8. நல்லோன் என வளர், நாட்கள் பாரேல்.
    Grow up virtuous, observe not days.

  9. நற்குணமே நல்ல ஆஸ்தி.
    A good disposition is the best treasure.

  10. நற்பெண்டீர் நல்லதைக் கண்டால் நமது நாயகனுக்கு என்பார்.
    When a faithful wife finds a good thing, she will keep it for her husband.