Page:Tamil proverbs.pdf/411

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
393
  1. நாய் குலைத்து விடியுமா, கோழி கூப்பிட்டு விடியுமா?
    Does the day dawn because the dog barks, or because the cock crows?

  2. நாய் கெட்டகேட்டுக்கு மாமரத்து நிழல், அது கெட்ட கேட்டுக்குப் புளியிட்ட கறி.
    Mean as the dog is, he has the shade of a mango tree,—his curry is flavoured with acid.

  3. நாய் கெட்ட கேட்டுக்குத் தேங்காய்ப்பாலும் சோறுமா?
    Is a miserable dog to be fed with cocoanut milk and rice?

  4. நாய் கொண்டுபோன பானையை ஆர் கொண்டுபோனால் என்ன?
    What matters it who takes away the vessel that the dog had carried off?

  5. நாய் கோவிலுக்குப் போவான் ஏன் கோயில் காத்தவன் தெண்டம் இறுப்பான் ஏன்?
    Why should a dog go to a temple, or why the keeper of a temple pay a fine?

  6. நாய்க்குக் கடிவாளம் பூட்டினாற்போல.
    Like putting a bridle in the mouth of a dog.

  7. நாய்க்குத் தெரியுமா கொக்குப் பிடிக்க?
    Does a dog know how to catch a crane?

  8. நாய்க்குத் தெரியுமோ தோல் தேங்காய்?
    Does a dog appreciate an unhusked cocoanut?

  9. நாய்க்கு நறுநெய் இணங்காது.
    Good cow ghee is not agreeable to a dog’s stomach.

  10. நாய்க்கு இரும்புக்கடையில் அலுவல் என்ன?
    What business has a dog in an iron bazaar?

  11. நாய்க்கு முழுத் தேங்காய் தக்குமா?
    Will a whole cocoanut suit a dog?