Page:Tamil proverbs.pdf/419

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
401
  1. நிலத்திற்குத் தகுந்த கனியும் குலத்திற்கு தகுந்த குணமும்.
    Fruit appropriate to the soil, and quality agreeable, to one’s rank.

  2. நிலம் கடக்கப் பாயலாமா?
    Can you clear the earth at a leap?

  3. நிலத்துக்கு ஒளித்துப் பரதேசம் போனதுபோல.
    Like going to another country to escape from moonlight.

  4. நிலை இல்லான் வார்த்தை நீர்மேல் எழுத்து.
    The words of the unstable are letters on water.

  5. நிலையிற் பிரியேல்.
    Swerve not from rectitude.

  6. நிலையை விட்டால் நீச்சு.
    When out of your depth, swimming.

  7. நில்லாத காலடி நீண்ட தூரம் போகும்.
    Ceaseless walking accomplishes great distances.

  8. நில்லாது ஏதும் நிலையே கல்வி.
    Learning alone is enduring, all else is evanescent.

  9. நிழலுக்கும் களவுக்கும் ஒத்தது ஆக்கை.
    The body may be compared to a shadow, and to theft,

  10. நிழல் அருமை வெயிலில் தெரியும்.
    The salubrity of shade is realized in sunshine.

  11. நிழல் நல்லது முசிறு பொல்லாதது.
    The shade is good, the ants are bad.

  12. நிறைந்த ஆற்றில் பெருங்காயம் கரைத்ததுபோல.
    Like dissolving assafœtida in a flooded river.

  13. நிறை பொதியிலே கழுதை வாய் வைத்தாற்போல.
    As an ass put its mouth into a full sack.