Page:Tamil proverbs.pdf/422

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
404
பழமொழி.
  1. நீரும் கொல்லும் நெருப்பும் கொல்லும்.
    Water kills, and fire also kills.

  2. நீரை அடித்தால் வேறாமா?
    Can water be divided by a stroke?

  3. நீரைச் சிந்தினையோ சீரைச் சிந்தினையோ?
    Did you spill water, or did you spill your character?

  4. நீர் ஆழம் காணலாம் நெஞ்சு ஆழம் காணப்படாது.
    The depth of water may be ascertained, but not the depth of the heart.

  5. நீர் உயர நெல் உயரும்.
    As the water rises, the rice plant rises.

  6. நீர் உள்ள மட்டும் மீன்குஞ்சு துள்ளும்.
    The young fish will sport as long as the water lasts.

  7. நீர் என்று சொன்னால் நெருப்பு அவியுமா?
    Can fire be quenched by pronouncing the word water?

  8. நீர் என்று சொல்ல நெருப்பாய் முடிந்தது.
    When it was said to be water, it turned out to be fire.

  9. நீர்க்குட் பாசிபோல் வேர்க்கொள்ளாது.
    As moss in water, it will not take root.

  10. நீர் போனால் மீன் துள்ளுமா?
    When the water goes, will the fish leap about?

  11. நீர்மேற் குமிழிபோல் நிலை இல்லாக் காயம்.
    The body is unstable as a bubble on water.

  12. நீர் விளையாடேல்.
    Do not play in water.

  13. நீலத்துக்குக் கறுப்பு ஊட்டவேண்டுமா?
    Is black dyed in blue?