Page:Tamil proverbs.pdf/437

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
419
  1. படுகளத்தில் ஒப்பாரியா?
    Do they sing elegies in a battle-field?

  2. படுக்கைச் சுகம் மெத்தை அறியாது.
    The comfort of the bed is not experienced by the mattress.

  3. படுவது பட்டும் பட்டத்துக்கு இருக்கவேண்டும்.
    Whatever hardships he may have to endure, he must have the rank to which he is entitled.

  4. படை கெட்டு ஓடுகையில் நரை மயிர் பிடுங்குகிறதா? .
    When an army is routed, are grey hairs pulled out?

  5. படைக்கு ஒருவன் கொடைக்கு ஒருவன்.
    One to fight, and one to give.

  6. படை மிகுந்தால் அரண் இல்லை.
    If an army be large, a fortress is not required.

  7. படை முகத்திலும் அறிமுகம் வேண்டும்.
    An acquaintance is necessary even in a battle-field.

  8. படையாது படைத்த மருமகளே உன்னைப் பறையன் அறுக்கக் கனாக் கண்டேன்.
    O, my daughter-in-law, who art entertaining me sumptuously, I dreamt that thou wast being dissected by a pariah.

  9. பட்சி பசித்தாலும் எட்டிக்கனியைத் தின்னாது.
    Though a bird is hungry, it will not eat poisonous berries.

  10. பட்ட காலிலே படும், கெட்ட குடியேக் கெடும்.
    It will hit the foot already injured, the decayed family will be ruined.

  11. பட்டணத்தாள் பெற்ற குட்டி பணம் பறிக்க வல்ல குட்டி.
    A young one born of a city mother is clever at thieving.

  12. பட்டணத்து வாசலைப் படலாலே மூடுகிறதோ?
    Can you cover up a city gate with a hurdle?