Page:Tamil proverbs.pdf/445

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
427
  1. பல மரம் கண்ட தச்சன் ஒருமரம் வெட்ட மாட்டான்.
    The carpenter who is acquainted with various sorts of wood, is not able to fell a tree.

  2. பல முயற்சி செய்யினும் பகவன் மேல் சிந்தை வை.
    After making every effort, fix your mind on God.

  3. பல வீட்டுப் பிச்சை ஆறாய்ப் பெருகும்.
    The alms of many houses may flow as a river.

  4. பலன் இல்லாப் பல நாளிலும், அறம் செய் ஒரு நாள் பெரிது.
    One day spent in alms giving is greater than many spent in doing nothing.

  5. பலா உத்தமம், மா மத்திபம், பாதிரி அதமம்.
    The jack tree is the best, the mango is good, the pathri tree is indifferent.

  6. பல் ஆடப் பசி ஆறும்.
    As the teeth move hunger is appeased.

  7. பல்லக்கு ஏற யோகம் உண்டு உன்னி ஏறச் சீவன் இல்லை.
    He has a palanquin, but is not able to mount it.

  8. பல்லக்குக்கு மேல்மூடி இல்லாதவனுக்கும், காலுக்குச் செருப்பு இல்லாதவனுக்கும் விசாரம் ஒன்றே.
    He whose palanquin has no top, and he who has no shoes for his feet are equal.

  9. பல்லு விழுந்த புடையன்.
    A snake without fangs.

  10. பல்லு விழுந்த புடையனுக்கு கிருதா?
    Is the rage of a fangless snake dangerous?

  11. பவுசு கெட்ட பாக்கட்டிக்கு இரண்டு பக்கமும் தீவட்டியாம்.
    A torch on either side of a lump of worthless sugar.

  12. பழக பழகப் பாலும் புளிக்கும்.
    By constant use even milk will taste sour.