Page:Tamil proverbs.pdf/444

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
426
பழமொழி.
  1. பருத்திப் பொதிக்கு ஒரு நெருப்புப் பொறிபோல.
    As a single spark to a bale of cotton.

  2. பருப்பிலே நெய் விட்டதுபோல.
    As ghee was poured on beans.

  3. பருமரத்தை அண்டிய பல்லியும் சாகாது.
    If sheltered near a large tree even a lizard will not die.

  4. பல உமி தின்றால் ஒரு அவிழ் தட்டும்.
    If one consume plenty of husks, a grain may turn up.

  5. பல சரக்குகாரனைப் பயித்தியம் பிடித்ததுபோல.
    As the vendor of curry stuff was seized with madness.

  6. பல தீட்டுக்கு ஒரு முழுக்கு.
    One ablution for many defilements.

  7. பல துளி பெரு வெள்ளம்.
    Many drops make great flood.

  8. பருவத்தே பயிர் செய்.
    Cultivate in due time.

  9. பரோபகாரமே பெரிது.
    Benevolence is indeed great.

  10. பலத்தவனுக்கு மருந்து சொன்னாற் பிடுங்கிக் கொடுத்துத் தீர வேண்டும்.
    If you prescribe medicine for the strong, you must procure the medicinal plants yourself.

  11. பலத்தவன் கைக்கு இளைத்தவன் துரும்பு.
    The feeble is a straw in the hands of the powerful.

  12. பலநாளைத் திருடன் ஒரு நாளைக்கு அகப்படுவான்.
    An old thief will one day be caught.

  13. பல பாவம் தீர ஒரு புண்ணியம் ஆகிலும் பண்ண வேண்டும்.
    One virtuous deed at least, is required to expiate numerous sins.