Page:Tamil proverbs.pdf/450

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
432
பழமொழி.
  1. பறைத் தெருவிலே வில்வம் முலைத்ததுபோல
    As a vilva tree sprang up in a pariah street.

  2. பறைப்பாட்டுக்கும் பறைப்பேச்சுக்கும் சுரைப்பூவிற்கும் மணம் இல்லை.
    A pariah’s song, his dialect, and a surai flower, have no fragrance in them.

  3. பறையனும் பார்ப்பானும் போல.
    Like a pariah and a brahman.

  4. பறையன் பொங்கல் இட்டால் பகவானுக்கு ஏறாதோ?
    If a pariah boil rice as an offering to God, will it not be accepted?

  5. பறையை பள்ளிக்கு வைத்தாலும் துறைப்பேச்சுப் போமா?
    Though a pariah is schooled, will his vulgar brogue be altered?

  6. பறைவேலை அரைவேலை.
    The work of a pariah is only half done.

  7. பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுமா?
    Will the jackal of the palmyrah grove tremble at the rustling leaves?

  8. பனிக்கண் திறந்தால் மழைக்கண் திறக்கும்.
    If there be dew, there will be no rain.

  9. பனி பெய்து கடல் நிறையுமா?
    Will the sea be filled by the falling dew?

  10. பனி பெய்து குளம் நிரம்புமா?
    Will the falling dew fill the tank?

  11. பனி பெய்தால் மழை இல்லை, பழம் இருந்தால் பூ இல்லை.
    When there is dew there is no rain, when fruit is ripe there is no blossom.

  12. பனிப் பெருக்கிலே கப்பல் ஓட்டலாமா?
    Can you sail a ship in heavy dew?