Page:Tamil proverbs.pdf/456

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
438
பழமொழி.
  1. பாராத உடைமை பாழ்.
    Property not looked after perishes.

  2. பாரைக்கு ஊடாடாப் பாறை பசுமரத்தின் வேருக்கு ஊடாடிவிடும்.
    The rock that resists-a’ crowbar, gives way to the roots of a tender plant.

  3. பார் ஆளலாமென்று பால் குடிக்கிறாய்.
    Thou drinkest milk, hoping to govern the world.

  4. பார்க்கக் கொடுத்த பணத்துக்கு வெள்ளிக்கிழமையா?
    Is Friday a sufficient excuse for not returning the coin given you to look at?
    It is believed by many that, though it is fortunate to receive money on Friday, it is unfortunate to pay it.

  5. பார்க்கிற கண்ணுக்குக் கேட்கிற செவி பொல்லாது.
    A listening ear, is worse than a seeing eye.

  6. பார்த்த கண்ணும் பூத்துப் பகலும் இரவு ஆயிற்று.
    The eyes have failed by looking too long, and night has followed the day.

  7. பார்த்த முகம் எல்லாம் வேற்றுமுகம்.
    All the faces we see are diverse from one another.

  8. பார்த்தாற் பசுப்போல, பாய்ந்தால் புலிப்போல.
    In appearance like a cow, in action like a tiger.

  9. பார்த்திருக்கத் தின்று விழித்திருக்கக் கை கழுவுவான்.
    Gazed at-by starving beggars-he eats and washes his hands.

  10. பார்த்திருந்தவள் பச்சை குத்தினாள், கேட்டிருந்தவள் வறுத்துக் குத்தினாள்.
    She who had seen the process pounded it undried, she who had heard of it pounded roasted.