Page:Tamil proverbs.pdf/462

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
444
பழமொழி.
  1. பிடாரி வரம் கொடுத்தாலும் ஒச்சன் வரம் கொடுக்கிறது அரிது.
    Though a pidári may grant a favour, it will be difficult to obtain it through the priest.

  2. பிடி அழகி புகுந்தால் பெண் அழகி ஆவாள்
    If a woman ornamented with jewels enter, she will be regarded as a beautiful woman.

  3. பிடிக்குப்பிடி நமசிவாயமா.
    Are incantations to be used again and again.

  4. பிடித்த கொம்பும் விட்டேன் மிதித்த கொம்பும் விட்டேன்.
    I have left the branch I had seized, and also the one on which I was standing.

  5. பிடித்த கொம்பும் ஒடிந்தது மிதித்த கொம்பும் முறிந்தாற்போல் ஆனேன்.
    I have become as helpless as if the branch I seized, and the one I stood upon, both broke at the same time.

  6. பிடித்தாற் கற்றை, விட்டாற் கூளம்
    If tied, a bundle; if loose, bits of straw.

  7. பிக்ஷாபதியோ லக்ஷாபதியோ?
    Is he the prince of beggars, or the first as possessing lacs?

  8. பிணத்தை மூடி மணத்தைச் செய்.
    Bury the corpse, and then celebrate the marriage.

  9. பிணம் போகிற இடத்தே துக்கமும் போகிறது.
    Sorrow goes away to the place whither the corpse has gone.

  10. பிணைப்பட்டுக் கொள்ளாதே பெரும்பவத்தை உத்தரிப்பாய்.
    Do not stand security, it will lead to endless evils.

  11. பிண்டத்துக்குக் கிடையாதது தெண்டத்துக்கு அகப்படும்
    That which cannot be obtained for sustenance, will be found to pay a fine.