Page:Tamil proverbs.pdf/461

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
443
  1. பிச்சைக்கு வந்தவன் பெண்ணுக்கு மாப்பிள்ளையா?
    Do you propose giving your daughter in marriage to one who came to ask alms?

  2. பிச்சைக்கு மூத்தது கச்சவடம்.
    Merchandize is a little better than begging.

  3. பிச்சைச் சோற்றிலும் குழைந்த சோறா?
    Is rice offered in charity refused because it is overboiled?

  4. பிச்சைச் சோற்றிற்குப் பஞ்சம் உண்டா?
    Is rice given in charity ever scarce?

  5. பிச்சை போட்டது போதும் நாயைக் கட்டு.
    The alms given are sufficient; tie up the dog.

  6. பிச்சை புகினும் கற்கை நன்றே.
    Learning is good even when one is reduced to begging.

  7. பிச்சை இட்டுக் கெட்டவனும் உண்டா?
    Has any one been ruined by giving alms?

  8. பிச்சை இட்டுக் கெட்டவனும் இல்லை, பிள்ளை பெற்றுக் கெட்டவனும் இல்லை.
    None is ruined by giving alms; none is ruined because he has a family.

  9. பிச்சை எடுத்தும் சத்துருவின் குடி கெடு.
    Though you have to beg, destroy the family of your enemy.

  10. பிடாரம் பெரிதென்று புற்றிலே கை வைக்கலாமா?
    Relying on the efficacy of the prescribed remedy, will you put your hand in a snake hole?

  11. பிடாரனுக்கு அஞ்சிப் பாம்பு எலிக்கு உறவு ஆச்சுதாம்.
    It is said that a snake afraid of the charmer, sought the friendship of a rat.

  12. பிடாரியாரே கடா வந்தது.
    O, demon, the bull has come.