Page:Tamil proverbs.pdf/460

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
442
பழமொழி.
  1. பாழாய்ப் போகிறது பசுவின் வாயிலே.
    That which is spoiled is put in the mouth of a cow.

  2. பாழ் ஊருக்கு நரி ராஜா
    The jackal is king in a deserted village.

  3. பானையில் உண்டானால் அகப்பையில வரும்.
    If in the pot, it will come into the spoon.

  4. பானையிலே பதக்கு நெல் இருந்தால் மூலையிலே முக்குறுணி தெய்வம் கூத்தாடும்.
    If there be a pathaku of rice in the pot, three kurunies of gods will dance in the corner.

பி.

  1. பிசினி தன்னை வசனிப்பது வீண்.
    It is useless to extol a miser.

  2. பிச்சன் வாழைத் தோட்டத்திலே புகுந்ததுபோல.
    As a madman entered the plantain grove.

  3. பிச்சைக்காரனுக்குப் பயப்பட்டு அடுப்பு மூட்டாமல் விடுகிறதா?
    Through fear of beggars do you refrain from lighting your fire?

  4. பிச்சைக்காரனை அடித்தானாம் சோளையைப்போட்டு உடைத்தானாம்.
    It is said that he beat the mendicant and broke his alms-dish.

  5. பிச்சைக்காரன் சோற்றிலே சனீச்சுரன் புகுந்ததுபோல.
    As Saturn entered into the rice of the mendicant.

  6. பிச்சைச் சோற்றிலும் எச்சிற் சோறா?
    What! scrupulous about leavings in rice got by begging?

  7. பிச்சைக்காரன்மேலே பிரமாஸ்திரம் தொடுக்கிறதா?
    Is an enchanted arrow discharged at a mendicant?