Page:Tamil proverbs.pdf/459

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
441
  1. பால் தொட்டுப் பால் கறக்கவேண்டும்.
    One must draw milk after moistening the fingers with milk.

  2. பால் நக்காத பூனையும் பரிதானம் வாங்காத பிராமணனும் உண்டா ?
    Is there a cat that will not lap milk, or a brahman that will refuse a bribe?

  3. பால் பசுவைக் கன்றிலே தெரியும், பாக்கியவான் பிள்ளையை முகத்திலே தெரியும்.
    The milch cow is known by its calf, and the child of the wealthy by its face.

  4. பால் வார்த்து முழுகுவான்.
    He will bathe after applying milk to the head.
    Intimating that a person inimical has been got rid of.

  5. பாவட்டம் பூப்போல நரைத்தும் புத்தி இல்லை.
    Though as grey as a pávattam flower, he has no sense.

  6. பாவத்திற்கு இடம் கொடாதவன் பாவத்தைச் செயங்கொள்வான்.
    He who does not give place to sin, will conquer it.

  7. பாவம் செய்யாதிரு, மனமே!
    O my heart, do not sin!

  8. பாவலர் அருமை நாவலர் அறிவார்.
    The ability of a poet is best known to the learned.

  9. பாவியார் போன இடம் எல்லாம் பள்ளமும் திட்டியும்.
    Whithersoever the simple go, they meet with ups and downs.

  10. பாவியைப் பிடித்துப் பாம்பு ஆட்டுகிறது.
    Seizing a simpleton and making him dance like a snake.

  11. பாவில் இருக்கிறது பார்த்தும் இருக்கிறது.
    That which is described in poetry is also seen in nature.