Page:Tamil proverbs.pdf/458

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
440
பழமொழி.
  1. பாலுக்குச் சீனி இல்லை என்றோர்க்கும் கூழுக்குக் கறி இல்லை என்றோர்க்கும் விசாரம் ஒன்றே.
    The care of those who want sugar with milk, and of those who want curry for their rice, are the same.

  2. பாலுமாம் மருந்துமாம்.
    It is of use both as milk and medicine.

  3. பாலும் பதக்கு , மோரும் பதக்கோ ?
    Is the rate of fresh milk that of buttermilk?

  4. பாலும் வெள்ளை மோரும் வெள்ளை.
    Milk is white and buttermilk is also white.

  5. பாலை ஊட்டுவார்கள் பாக்கியத்தை ஊட்டுவார்களா?
    They may feed him with milk; can they feed him with good fortune?

  6. பாலைக்குடித்தவனுக்குப் பால் ஏப்பம் வரும், கள்ளைக் குடித்தவனுக்குக் கள் ஏப்பம் வரும்.
    He who has drank milk will belch milk, and he who has drank toddy will belch toddy.

  7. பாலைப் பார்க்கிறதா பானையைப் பார்க்கிறதா?
    Do you examine the milk or the vessel containing it?

  8. பாலொடு கலந்த நீரும் பாலாகும்.
    Water mixed with milk looks like milk.

  9. பாலோடாயினும் காலம் அறிந்து உண்.
    Though with milk, take your meals at the proper time.

  10. பால் ஆரியனுக்கு, பசு ராமநாதசுவாமிக்கு.
    Milk to an Aryan, and a cow for Rámanádaswámi.

  11. பால் இருக்கிறது பாக்கியம் இருக்கிறது, பாலிலே போட்டுக் குடிக்கப் பத்துப் பருக்கைக்கு வழி இல்லை.
    There is milk and money, but no means for procuring ten grains of rice.