Page:Tamil proverbs.pdf/465

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
447
  1. பிள்ளைவருத்தம் பெற்றவளுக்குத் தெரியும் மற்றவளுக்குத் தெரியுமா?
    A mother knows the pain of travail, is it known to others?

  2. பிள்ளைவீட்டுக்காரர் சம்மதித்தால் பாதி விவாகம் முடிந்ததுபோல.
    If the family of the bridegroom consent, half the ceremony of marriage is over.

  3. பிறக்கிறபொழுதே முடம் ஆனால் பேய்க்கு இட்டுப் படைத்தால் தீருமா?
    If a person be a cripple from his birth, can he be cured by offerings made to demons?

  4. பிறந்த பிள்ளை பிடி சோற்றிற்கு அழுகிறது, பிறக்கப்போகிற பிள்ளைக்குத் தண்டை சதங்கை தேடுகிறார்களாம்.
    It is said that they are making silver bells for the child about to be born, while the child on the lap is crying for a handful of rice.

  5. பிறந்தவன் இறப்பதே நிசம்.
    It is certain that he who is born will die.

  6. பிறந்தன இறக்கும் தோன்றின மறையும்.
    Those who are born will die, what is visible will vanish.

  7. பிறந்த அன்றே இறக்கவேண்டும்.
    The day of birth leads to death.

  8. பிறந்த ஊருக்குச் சேலை வேண்டாம், பெண்டு இருந்த ஊருக்குத் தாலிவேண்டாம்.
    A sumptuous cloth is not required in one’s native village, nor a tàli where one is known as a wife.

  9. பிறர் பொருளை இச்சிப்பான தன் பொருளை இழப்பான்.
    He who covets the property of others, will lose his own.