Page:Tamil proverbs.pdf/467

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
449
  1. புகழ்ந்தாரைப் போற்றி வாழ்.
    Defend those who acknowledge your merit.

  2. புகைக்கினும் காரகில் பொல்லாங்கு எழாது.
    Though eaglewood produces smoke, it will do no harm.

  3. புங்கப்புகழே தங்கத்திகழே.
    The contempt of riches is the highest praise.

  4. புண்ணியத்துக்குக் கிணறு வெட்ட பூதம் புறப்பட்டதுபோல.
    As a demon came out of a well that had been dug as an act of religious merit.

  5. புண்ணியத்துக்கு உழுத மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்த்ததுபோல.
    Like looking at the teeth of a bullock that is ploughing for nothing.

  6. புண்ணியம் பார்க்கப் போய்ப் பாவம் பின்னே வந்ததாம்.
    It is said that evil followed the man who attempted a kind act.

  7. புண்ணியம் இல்லாத வழிகாட்டி வீண்.
    A leader not virtuous is worthless.

  8. புண்ணிலே கோல் இட்டதுபோல.
    Like thrusting a stick into a wound.

  9. புண்ணிலே புளி பட்டதுபோலே.
    As if a sore had become acidified.

  10. புண்ணுக்கோ மருந்துக்கோ வீசம்.
    Whether calls for immediate action, the sore or its remedy?

  11. புதிய காரியங்களிற் புதிய யோசனை வேண்டும்.
    New things require fresh consideration.

  12. புதிய வண்ணாணும் பழைய அம்பட்டனும் தேடவேண்டும்.
    Employ a new washerman, but an old barber.

  13. புதிய வண்ணான் பொந்துகட்டி வெளுப்பான்.
    A new washerman will wash with great care.