Page:Tamil proverbs.pdf/473

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
455
  1. பூசாரி பூ முடிக்கப் போனானாம், பூ ஆலங்காடு பலாக் காடாய்ப் போச்சுதாம்.
    The priest began to wear flowers, and the flower garden became a grove of jack trees.

  2. பூசை முகத்திலே கரடியை விட்டு ஓட்டினதுபோல.
    Like driving a bear among those engaged in worship.

  3. பூச்சி மரிக்கிறதில்லை, புழுவும் சாகிறதில்லை.
    Insects do not perish, nor do worms die.

  4. பூட்டிப் புசிக்காமற் புதைப்பார் ஈயைப்போல் ஈட்டி இழப்பார்.
    Those who lock up their treasure and refuse to enjoy it will be deprived of it, as bees are deprived of their honey.

  5. பூட்டும் திறப்பும்போல.
    As a lock and its key.

  6. பூதலம் யாவும் போற்று முச்சுடர்.
    The three lights which the whole world extol.

  7. பூத்தானமான பிள்ளை ஆத்தாளைத் தாலிக் கட்டிற்றாம்.
    It is said that an indulged child tied a tali on his mother.

  8. பூத்துச் சொரியப் பொறுப்பார்கள் பூட்டிக் கட்டக் கலங்குவார்கள்.
    They can endure seeing their tree shedding its blossoms, but will be disquieted at seeing others string and wear them.

  9. பூமி அதிர நடவாத புண்ணியவான்.
    A virtuous person under whose footsteps the earth trembles not.

  10. பூமி திருத்தி உண்.
    Till the soil, and enjoy its produce.

  11. பூராடக்காரனோடு போராட முடியாது.
    One cannot strive with one born under the star purádam.