Page:Tamil proverbs.pdf/472

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
454
பழமொழி.
  1. புறக்குடத்துத் தண்ணீர்போல.
    Like water on the outside of a pot.

  2. புற்றிலே ஆந்தை விழிப்பதுபோல.
    Blinking like an owl on an ant-hill.

  3. புற்றிலே ஈசல் புறப்பட்டதுபோல.
    Coming forth like a swarm of winged white ants from an ant-hill.

  4. புற்றிலே கிடந்த புடையன் எழுப்பினதுபோல.
    Rushing as a beaver snake from its hole.

  5. புற்றிலே ஈசல் புறப்பட்டாலும், மண்ணிலே கறையான் கட்டினாலும் மழை வரவே வரும்.
    When winged white ants issue out of a hole, and white ants swarm, it will certainly rain.

பூ.

  1. பூ அரசு இருக்கப் பொன்னுக்கு அழுவானேன்?
    Why weep for gold while you have the tulip tree?

  2. பூசணிக்காய் அத்தனை முத்துக் காதில் ஏற்றுகிறதா மூக்கிற் ஏற்றுகிறதா?
    If a pearl be as large as a pumpkin, where is it to be worn, in the ear or in the nose?

  3. பூசணிக்காய் எடுத்தவனைத் தோளிலே காணலாம்.
    If one has taken a pumpkin, its mark may be seen on his shoulder.

  4. பூசணிக்காய் அழுகினதுபோல.
    Like a decayed pumpkin.

  5. பூசப் பூசப் பொன் நிறம்.
    The more you gild it, the more like gold will it appear.