Page:Tamil proverbs.pdf/484

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
466
பழமொழி.
  1. பொதி வைக்கிறதற்கு முன்னே சத்தத்திற்கு அளக்கிறதா?
    Am I to measure out the hire before adjusting the load!

  2. பொத்தைச் சுரைக்காய்போலே.
    Like a fleshy gourd.

  3. பொய் இருந்து புலம்பும் மெய் இருந்து விழிக்கும்.
    Falsehood will never cease to weep, truth will ever be conspicuous.

  4. பொய் உடை ஒருவன் சொல் வன்மையினால் மெய்போலும்மே மெய்போலும்மே.
    The falsehood of a liar by reason of its force, may appear like truth, may appear like truth.

  5. பொய் சொன்ன வாய்க்குப் போசனம் கிடையாது.
    The mouth accustomed to lies will be deprived of food.

  6. பொய் சொன்ன வாய்க்குப் பொரியும் கிடையாது.
    The mouth accustomed to lies will be deprived of even parched corn.

  7. பொய் சொல்லி வாழ்ந்தவனும் இல்லை, மெய் சொல்லிக் கெட்டவனும் இல்லை.
    No one ever prospered by telling lies, no one was ever reduced to poverty by speaking truth.

  8. பொய் மெய்யை வெல்லுமா?
    Will falsehood conquer truth?

  9. பொய்யான பொருளாசை மெய்யான அருளாசையை விலக்குகிறது.
    The false love of money, will take away the real love of divine grace.

  10. பொய்யும் ஒரு பக்கம் பொறாமையும் ஒரு பக்கம்.
    Falsehood on one side, and envy on the other.

  11. பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்லவேண்டும்.
    Though you tell lies, do so consistently.