Page:Tamil proverbs.pdf/483

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
465

பை.

  1. பைசாசைப் பணியேல்.
    Yield not to a demon.

  2. பைந்தமிழ்ப் புலவோர் பாட்டுக்கு ஏற்றவன்.
    He is worthy to be sung by poets.

  3. பையச் சென்றால் வையம் தாங்கும்.
    If you walk gently, the earth will bear you.

  4. பைய மிதித்தது வேடன் அடி, பதறி மிதித்தது பன்றி அடி.
    The light footstep is that of the hunter, the firm footstep is that of the hog.

  5. பைய மென்றால் பனையையும் மெல்லலாம்.
    If masticated slowly even a palmyrah tree may be chewed.

  6. பையிற் கட்டிவைத்த பொருள் பறிகொடுக்கப்பட்டது.
    The wealth tied up in a bag was lost.

பொ.

  1. பொக்கவாய்ச்சி மெச்சினாளாம் பொரிமாலை.
    It is said that a toothless dame appreciated the rice flour.

  2. பொங்கும் காலம் புளி பூக்கும், மங்கும் காலம் மா பூக்கும்.
    In times of plenty the tamarind tree blossoms, in times of scarcity the mango bears in abundance.

  3. பொதி அளக்கிறதற்குமுன்னே சத்தத்திற்கு அளக்கிறதா?
    Am I to measure out the hire, before measuring out the load?

  4. பொதியை வைத்து விட்டுப் பிச்சைக்குப் போனான், அதையும் வைத்து விட்டுச் செத்துக் கிடந்தான்.
    Having loaded his bullock, he went abegging; the product he put on one side, and died.

30