Page:Tamil proverbs.pdf/482

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
464
பழமொழி.
  1. பேயும் சிலது ஞாயம் பகரும்.
    Even a demon will have some reason to assign.

  2. பேய் ஆடிய கம்பம்போல.
    Like a pole on which a demon dances.

  3. பேய் கொண்டாலும் பெண் கொள்ளல் ஆகாது.
    One may take a demon, but not take a wife.

  4. பேய்க்குக் கள் வார்த்ததுபோல.
    Like pouring out toddy to a demon.

  5. பேய்க்கு வேப்பிலைபோலே.
    As margosa leaves before a demon.

  6. பேய்க்கு வேலை இட்டதுபோல.
    Like setting a demon to work.

  7. பேய்க்கூத்தும் ஆமணக்கும் ஆள்போனால் ஆள் தெரியாது.
    A devil dance is a garden of castor oil plants, if one gets in he is not seen again.

  8. பேய் சிரித்தாலும் ஆகாது அழுதாலும் ஆகாது.
    If a demon smiles it is bad, and if he weep that too is inauspicious.

  9. பேய் பிடிக்கவும் பிள்ளை பிழைக்கவுமா?
    Will a child struck by a demon survive?

  10. பேய் போய்ப் புளியமரத்தில் ஏறினதுபோல.
    As a demon ascended a tamarind tree.

  11. பேராசைக்காரனைப் பெரும்புளுகால் வெல்லவேண்டும்.
    The avaricious must be overcome by notorious lies.

  12. பேராசை பெரிய நஷ்டம்.
    Avarice ends in loss.

  13. பேர் இல்லாச் சன்னதி பாழ், பிள்ளை இல்லாச் செல்வம் பாழ்.
    The presence of one without reputation does no good, wealth without a child is useless.