Page:Tamil proverbs.pdf/488

From Wikisource
Jump to navigation Jump to search
This page has been proofread, but needs to be validated.
470
பழமொழி.
  1. பொன்ணாங்காணிக்குப் புளி விட்டு ஆக்கினால் உண்ணாப் பெண்ணும் ஒரு உழக்கு உண்ணும்.
    The compound of ponnánkáni greens-illecebrum-and tamarind, will enable a girl who has lost her appetite to eat an ulak of rice.

  2. பொன்னான மனதைப் புண்ணாக்குகிறான்.
    He ulcerates the golden mind.

  3. பொன்னாலே கலம் உண்டானாலும் மண்ணாலே சுவர் வேண்டும்.
    Though one may possess vessels of gold, the wall of his house must be of mud.

  4. பொன்னாலே மருமகளானாலும் மண்ணாலே ஒரு மாமி வேண்டும்.
    Though the daughter-in-law is made of gold, she must have a mother-in-law made of earth.

  5. பொன்னின் கலப்பை வரகுக்கு உழப் போனதாம் வரகு சேருக்கு வரகு பட்டதாம்.
    Golden ploughs were used for the cultivation of the millet, and the crop was less than the seed-corn.

  6. பொன்னின் குடத்திற்குப் பொட்டு இட்டு பார்க்க வேண்டுமா?
    Must a royal mark be inscribed on a golden pot, that it may appear the more beautiful?

  7. பொன்னின் குடம் உடைந்தாற் பொன் ஆகும் என்ன ஆகும் மண்ணின் குடம் உடைந்தாக்கால்?
    Though broken to pieces a golden pot will still be gold, of what use is an earthen pot when broken?

  8. பொன்னை வைக்கிற கோயிலிலே பூவையாவது வைக்க வேண்டும்.
    Flowers, at least, must be offered in a temple in which gold is offered.